Pages

Tuesday, July 19, 2011

தெய்வீக விளக்கங்கள்

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?


எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.


அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..

மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.

3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.

அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.

பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.


இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.

நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.

இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.

நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

பசுத்தாய் - கோமாதா (பெருமையும், பராமரிப்பும், பூஜையும்)



பாரதத்தில் வேதகாலம் தொடங்கி, இன்று வரை, பசுவின் (கோமாதாவின்) பெருமையையும், அதனைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், பசு இனத்தை வழிபாடும் முறைகளையும், தெரிவிக்காத இறை நூல்களே இல்லை எனலாம்.

- அவனருள்

புராணங்களில் (வரலாறுகள்) மற்றும் இறை இலக்கியங்களில், பசுவை போற்றியவர்கள், பராமரித்தவர்கள், காப்பாற்றியவர்கள் அடைந்த நன்மை நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை தொகுப்பதோ, முக்கியமானவற்றை நினைவு கூறுவது மட்டுமோ நோக்கம் அல்ல.

நம் நன்மை நாடி நாம் பசுவை ஆதரிக்க வேண்டும் என்பதை விட, பசுக்களைப் பராமரிப்பது நம் கடமை என்பதை வலியுறுத்துவதே நோக்கமாகும்.

கோ பூஜையினால், கோ தானத்தினால் அடையும் நன்மைகள் தெரிவிக்கப்பட்டிருப்பினும், பசுப்பராமரிப்பு நம் அனைவரின் அதி அவசரமான அவசியமான பணியாகும் என்று எல்லோரும் உணர வேண்டும்.

பசு வழிபாடு மூட நம்பிக்கை அல்ல; நம் மூதாதையர்களின் அறிவுடைமையால் உருவான மிக முக்கியமான செயல்பாடே. நவீன வாழ்முறை மோகத்தினால், பண்டையோர் விஞ்ஞான அடிப்படையில், மெய்ஞானமும் கூட்டுவதாக அளித்துள்ள பாரம்பரியப் பண்பாட்டை மறவாதிருக்க, பின்பற்றிட இறையருள் வைக்கட்டும்.

- அவனருள்

பசு (கோமாதா) வழிபாடு.

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே "சனாதன தர்மம்" என்ற இந்துமதம், "எல்லாம் இறை மாயம்" என்றும் "தத்வமசி" அதாவது "நீயும் பரம்பொருளே" என்றும் "அத்வைதம்" - எல்லாம் ஒன்றே - அதாவது "பரம்பொருள் இன்றி வேறொன்றும் இல்லை" என்றும் "காண்பவை எல்லாம், கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே" என்றும் கூறி வந்திருக்கின்றது.. இந்நிலையில்,

மிருக இனங்களில், பசுவையும், யானையையும்,
ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும்,
தாவர இனத்தில் அரசு, வேம்பு, போன்ற சிலவற்றை மட்டும்,
மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக,
தொன்று தொட்டு வழிபட்டு வருவதும்,
அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கோருவதும்,

பாரபட்சமற்ற செயல் தானா?
ஞாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள், பசுவையையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர் தவிர, பிறவற்றை இழிவு படுத்தவில்லை, அழிக்கச் சொல்லவுமில்லை.
எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும், ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும், புற்றுகளில் பாம்புக்குப் பால் வைப்பதும், அன்றாடம் பகலில் காக்கைக்கு உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நேர்கதிர்களைத் தொங்கவிடுவதும், இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

இதோடு, சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி, மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே, பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

- விநாயகன் யானைத்தலையன்
- அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சூறு
- தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில்
- தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம்
- மாமன் திருமால் படுப்பது பாம்பணையில்
- அவன் ஏறும் வாகனம் கருடன்
- எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும்
- தர்மதேவன் வருவது எருமையின் மீது
- சனீஸ்வரனை சுமப்பது காகம்

இப்படி நூற்றுக் கணக்காக பட்டியலிடலாம்.

மேலும், பல இனங்களின் நிலையை ஆய்ந்து, சிலவற்றை, உதாரணமாக, பூரான் தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் வழக்கம் இருக்கின்றது.
கோமாதா நம் குலமாதா!



பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

கன்றுக்கு பால் இல்லாமல், பசுவிடம் இருந்து பால் முழுவதையும் கறந்து விடுபவன், நரகத்தை அடைந்து வேதனையுறுவான். தவிர, மறுபிறவியிலும் மனிதனாகவே பிறந்து, பட்டினியுடனும் நீர் அருந்தவும் முடியாத நோயாளியாகவும் கிடந்து துன்பப்படுவான்.

நெற்றியில் குங்குமப் பொட்டு அளவுக்கு சுழியுடன் திகழும் பசுக்கள் வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம். அந்த வீட்டில் திருமணம், பிரசவம் போன்ற சுப காரியங்கள் அடிக்கடி நடைபெறும்.

கிராமப் பகுதிகளில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். பசுக்களுடன் ஓர் ஆசாமியும் உடன் செல்வான். ஆடி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில்... மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசுக்களில், சிவப்பு நிற பசு ஒன்று முதலில் ஓடி வந்து தொழுவத்தில் நுழைந்தால் அந்த வருடம் அதிகம் மழை பொழியும் என்பது ஐதீகம்.

வீட்டில் பசு இருப்பதால், ஐஸ்வர்யம் பெருகும். பசு மாட்டை விற்பதாக இருந்தால், அதை, கட்டி இருக்கும் தாம்புக் கயிற்றுடன் கொடுக்கக் கூடாது. கயிறை நாம் வைத்துக் கொண்டு பசுவை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், வேறு பசுக்கள் உடனடியாக நம் இல்லம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
கோமாதாவும் பூமாதாவும் :-

காஞ்சி மஹா பெரியவர் அருளியது

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி தானியங்கள், உலோகங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது, பசுத்தாய் என்பது போல் புவித்தாய்.

மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை - தாய்த் தத்துவத்தை - கண்டு கொண்டு நம்முடைய முன்னோர்கள் கோமாதா என்றும் பூமாதா என்றும் சொன்னார்கள்.

பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அசுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாபபாரத்தைத் தாங்க முடியவில்லை.

அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே பிரம்மாவும் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல் தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே, தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி, அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான், அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல், அதை விட ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால் தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு தான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்பத் தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார்.

"கோ" என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம்.
கிருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஒரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கே இருபத்தி நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம் எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போகபாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர் தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில் கண்டு அந்த பசுத் தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான சம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது.

கோ ரூபத்தில் பகவானுக்கு எததனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல் ப்ரீதி வேணுகோபாலனாக பகவான் இடது பாதத்தை பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும் போது தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு கோ நக்கிக் கொண்டிருக்கும். சித்ரங்களில் அப்படி போட்டிருக்கும்.
மாட்டுப்பொங்கல் இடுவது ஏன்?

வாயில்லா ஜீவன்களில் மனித சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து நிற்பது பசு என்றால்
அது மிகையில்லை. காலையில் எழுந்ததும் "பால் வந்து விட்டதா?" என்பது தான் நம்
முதல் கேள்வியாக இருக்கிறது. அன்போடு வாஞ்சையாக "அம்மா'' என்று பசு அழைக்கிறது.
ஆனால், உண்மையில் நம் எல்லோருக்கும் பசுவே தாயாக இருந்து பால் தந்து காக்கிறது.
பெற்ற தாய் கூட இரண்டு வயது வரை தான் பால் தருவாள். ஆனால், எத்தனை வயதானாலும்
பசுவின் பால், மோர், தயிர், நெய் நம் உணவில் சேர்த்துக் கொள்ள மறப்பதில்லை.


வயதாகி சாப்பிட முடியாத நிலை வரும் போது, பசும்பால் மட்டுமே நமக்கு
கைகொடுக்கிறது. உயிர் வெளியேறத் துடிக்கும் போது, குழந்தைகளெல்லாம் வாயில் பால்
ஊற்றுகிறார்கள். இறந்த பிறகு சமாதியிலும் பால் ஊற்றுகிறார்கள். இப்படி பிறப்பு
முதல் இறப்புக்குப் பிறகும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாயான பசுவுக்கு
நன்றிக்கடன் செலுத்தும் நோக்கத்திலேயே மாட்டுப்பொங்கல் இடப்படுகிறது. அதனால்
தான் அதனை "கோமாதா'' என்று அழைக்கிறோம்.

பசுவுக்காக வாழ்ந்த சித்தர் :-





திருவாவடுதுறைக்குத் தெற்கே உள்ள சாத்தனூர் என்னும் ஊரில் மூலன் என்னும்
இடையன் வாழ்ந்து வந்தான். தான் வளர்த்து வந்த பசுக்கள் மீது மிகுந்த அன்பு
கொண்டிருந்தான். பசுக்களும் மூலன் மீது தன் அன்பைப் பொழிந்தன. ஒருநாள் காட்டில்
மேய்ச்சலுக்கு சென்றபோது, ஒரு பாம்பு மூலனைத் தீண்டியது. அவன் இறந்து விட்டான்.
மூலனை விட்டுப் பிரிய மனமில்லாத பசுக்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. அவனைச்
சுற்றிச் சுற்றி வந்து கதறி நின்றன. வான் வழியே சென்று கொண்டிருந்த சிவயோகியான
சித்தர் ஒருவர் இக்காட்சியைக் கண்டு பசுக்கள் மீது இரக்கம் கொண்டார்.
பசுக்களின் கண்ணீரைத் துடைக்க எண்ணம் கொண்டார். "பரகாயப்பிரவேசம்" என்னும்
கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் மூலனின் உடம்பில் புகுந்தார். அதுவரை மூலனாக
இருந்த அந்த உடல், சித்தரின் புனித சேர்க்கையால் "திருமூலர்" என்ற பெயர்
பெற்றது. அவர் புகழ் பெற்ற சித்தர் ஆனார். தன் மீது அன்புகாட்டிய மூலன்
உயிர்த்தெழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. காலையிலிருந்து
பசும்புல் உண்ணாமல் வாடி நின்ற பசுக்கூட்டங்களை திருமூலர் நீர் அருந்தச் செய்து,
வயிறார மேயச் செய்து ஊர்போய் சேர்ந்தார். இவர் எழுதிய பாடல்கள் "திருமந்திரம்"
என்று போற்றப்படுகிறது.

பசுக்குலத்திற்கே பெருமை :-





அப்பர் தேவாரத்தில் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
என்று பாடுகிறார். "ஆ" என்றால் பசு; "அஞ்சாடுதல்" என்றால் "பஞ்சகவ்யத்தால்
அபிஷேகம் செய்தல்". பஞ்சகவ்யம் என்பது பசுவிடமிருந்து உண்டாகும்


- பால்
- தயிர்
- நெய்
- கோமியம் (பசுவின் ஜலம்)
- கோமயம் (பசுஞ்சாணம்)


என்னும் ஐந்து பொருள்களும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சேர்ந்த கலவையே
பஞ்சகவ்யம் எனப்படும்.


இதுதவிர,


- பாலபிஷேகம்
- தயிர் அபிஷேகம்
- நெய்யபிஷேகம்


என்று தனித்தனியாகவும் சிவபெருமானுக்குச் செய்வதும் உண்டு.


திருவையாறு அருகிலுள்ள "தில்லைஸ்தானம்" என்னும் தலத்தில் இருக்கும்
பெருமானுக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகும். தில்லைஸ்தானம் என்னும் இத்தலம்
தேவாரத்தில் திருநெய்த்தானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பஞ்சகவ்யத்தால்
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது பசுக்குலத்திற்கே பெருமை என்று அப்பர்
குறிப்பிடுகிறார். பால் அபிஷேகத்தை "கோசிருங்கம்" எனப்படும் பசுக்கொம்பினால்
செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.


*சாத்வீக** **உணவு**:* சாதுவான பிராணியான பசுவினைத் தெய்வமாகக் கருதி வழிபாடு
செய்கிறோம். பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதசமுதாயத்திற்கு மகத்தான
உணவுப்பொருளாகப் பாலைத் தருகிறது. உணவு வகையில்,


- சாத்வீகம் (சாந்தம்)
- இராட்சசம்(மிருகம்)
- தாம்சம் (மந்தம்)


என்று முக்குணங்களை ஏற்படுத்தும் பொருள்கள் உண்டு.


இதில் பசுவின் பால் சாத்வீக உணவாகும். பால் பசுவின் இரத்தம் என்பதால் அதுவும்
அசைவம் தானே என்ற அபிப்ராயம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால்,
சாஸ்திரத்தில் பசும்பால் சாத்வீக உணவு என்றே குறிக்கப்பட்டுள்ளது. பாலைக்
கொடுப்பதால் பசுவிற்கு ஹிம்சை எதுவும் இல்லை. அது நம் அறிவை துலங்கச் செய்கிறது.
பல சாதுக்கள், பசும்பாலை ஆகாரமாகக் கொண்டு உதாரணமாக வாழ்ந்து
காட்டியிருக்கிறார்கள். முக்குண உணவுகளைப் பற்றி விவரிக்கும் கீதையை போதித்த
கிருஷ்ணர், ஆயர்பாடியில் பாலையும், வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட
நவநீதகிருஷ்ணனாக இருந்திருக்கிறார்.
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில் முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்

ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

ஒரே விநாடியில் அன்னதானம் செய்ய விரும்புகிறீர்களா?

தானங்கள் 8 வகைப்படும்.அதில் மிக எளியது;நாம் ஒவ்வொருவரின் கர்மத்தையும்(நாம் செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தல்) அழிக்கும்திறன் அன்னதானத்திற்கு உண்டு.
வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு செய்யும் தானம் மட்டுமே அன்னதானம் ஆகும்.

www.thehungersite.com என்ற தளத்திற்குச் சென்றால் ஹோம் பக்கத்தில் அதாங்க முதல் பக்கத்தில் ஒரு ஆரஞ்சு நிற செவ்வகம் இருக்கும்.அதில் சுட்டொலியை வைத்து ஒரு க்ளிக் செய்துவிட்டால் போதும்.அடுத்த பக்கத்தில் சில விளம்பரங்களை நாம் பார்ப்போம்.அந்த விளம்பரத்தில் உள்ள நிறுவனங்கள் மேற்கூறிய இணைய தளத்திற்கு பணம் தரும்.அதில் ஒரு ஆளுக்கு(அனாதைக்கு) ஒருநாளுக்குத் தேவையான உணவை தந்துவிடுவர்.இது வெளிநாட்டில் உள்ள இணையதளம்.
இதே போல,நமது இந்தியாவிற்குள்ளிருந்து அன்னதான தளம் ஒன்று இயங்குகிறது.அதன் பெயர் www.bhookh.com

Thursday, November 29, 2007

மந்திர உச்சாடனம்

மந்திர உச்சாடனம்:-


"ஓம்"கார நமசிவாய "மூலமந்திரம்"
ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர சற்குரு அமைவார்।ஈசன் அருளால் அனைத்தும் கைவரப் பெறலாம்। தோல்வியே கிடையாது। புகழ் பெறுவர்। வசீகர சக்தி கிடைக்கும்।துஷ்ட சக்திகள் ஆண்டாது।


"ஓம் அகத்தீசாய நம‌
ஓம் நந்தீசாய நம‌
ஓம் திருமூலதேவாய நம‌
ஓம் கரூவூர் தேவாய நம‌"



ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா:-

ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதாய நம!



"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"


மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹாஸேனகுரும் வந்தே மஹாபய நிவாரணம்!!


சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்!!

பெருமாள் தமிழ் மந்திரம்
"அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்"

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!


"தர நக சிவ உரு சிவா சிவா"

ஓம் அண்ணாமலை அரசே போற்றி!
ஓம் உண்ணாமுலை உவந்தாய் போற்றி!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!


ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமஹ‌



"ஓம் நமோ நாராயணாய"



"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி ச‌க்தி ம‌கா ச‌க்தி ப‌ராச‌க்தி ஓம்"

மந்திர உச்சாடனம்

மந்திர உச்சாடனம்:-

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்

ஓம் கம் கணபதயே நம;
ஓம வம் கணபதயே நம;
ஓம் பம் கணபதயே நம;
ஓம் லம் கணபதயே நம;

ஓம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வராய நமஹ!


சிவய சிவ சிவ சிவ நமசிவாய சிவாய நம


ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹித்ந்நோ ருத்ர ப்ரசோதயாத்।


"ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷிகணங்கள் திருவடிகள் போற்றி போற்றி"


"பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம்,அருணாசலம், மஹாதேவ மஹாலிங்க மத்தியார் சுணாஸே"


ஸ்ரீ ருத்ரம்:-

"ஓம் நமஸ்தோ அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய ‍த்ரிபராந்தகாய த்ரிகாலாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸ்ர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீ மன் மஹாதேவாய நம"


மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம்:-

"ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"


அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !


"குருசிவ , குருஹரி ,குரு பிரம்மா
குருவே சாட்சாத் பரப்பிரம்மம் !"


வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!


வேலும் மயிலும் துணை

ஓம் சரவணபவ


ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !!!


ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!



ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் திருவடிகள் போற்றி! போற்றி!!


பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களையும் குறிப்பிடும் ஸ்லோகம்:-

ஸெளராஷ்ட்ரே ஸோமநாதம் ச ஸ்ரீ சைலே மல்லிகார்ஜீனம்!உஜ்ஜயின்யம் மகாகாளம் ஓம் கார மமலேக்ஷ்வரம்!!
பால்யாம் வைத்யநாதம் ச டாகின்யாம் பிமாசங்கரம்!
ஸேதுபந்தே துரோமேசம் நாகேசம் தாருகாவனே!!
வாரணஸ்யம் து விஸ்வேசம் த்ரயம்பகம் கெளதமீடே!ஹிமாலயேது கேதாரம் குஸ்மேசம் ச சிவாலயே!!

Tuesday, November 27, 2007

Sri Arunachaleshwara's live darshan anytime

Sri Arunachaleshwara's live darshan anytime :-

ஓம் ஸ்ரீ அருணாச்சலேஸ்வராய நமஹ!

http://www.arunachala-live.com/window.html

let us chant:-

அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !அருணாசலசிவ, அருணாசலசிவ,அருணாசலசிவ, அருணசிவா !

எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதேஅருளாளா! அருணாசலா!

- சித்தகுருவேத சூக்த மாமந்திரம்

Nothing is mine, Everything is YoursO Merciful Lord! Arunachala!

- Siddha Guru Veda Sooktha Maha Mantram


"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"

தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam)

தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam)

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீ குருவே சரணம்

குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீ தேவி பக்தாய‌ஸ்ரீ வெங்கடராம சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பரம குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ சர்ப்ப இரட்சக‌ஸ்ரீ அஸ்திக சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பரமேஷ்டி குரு:-
ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ காளஹஸ்தீஸ்வர‌சதா தப சித்த சுவாமிகள் போற்றி! போற்றி!!

பராபர குரு:-ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸ்வராய‌கெளஸ்துப புருஷாய ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் போற்றி!போற்றி!!

தெய்வீக விளக்கங்கள் (sri agasthiya vijayam):-

http://www.agnisiksha.org/ARCHIVE/

Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள்

Tuesday, July 12, 2011

ஆயுர்வேதம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஆயுர்வேதம்
மன அழுத்தம் குறைய …
முகத்தின் வசீகரம் காக்க…
பஞ்ச பூதங்களால் பிணி !
பற்கள் பளிச்சிட …
பெரியேனல் நோய் நீங்க…
புளிப்புக்குப் பின் இனிப்பு !
ரத்த அழுத்த ரகசியம் !
கண்ணிலே குறையிருந்தால்
முகம் அழகு பெற ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள்
ஆயுர்வேதம் கூறும் நொயற்ற வாழ்வு
ஆஸத்துமாவினால் அவதியா?
ஈரல் புண்ணுக்கு ஆயுர்வேதம் கூரும் மருந்துகள்
தொப்பை ஏற்படுவதர்கு முக்கிய காரணங்கள்
தோலில் ஏற்படும் நோய்கள்
சொத்தைப் பற்கள் தடுக்கும் வழிகள்
இடுப்பு வலியை போக்க ஆயுர்வேதம் கூரும் வழிகள்
பக்கவாதம் நீங்க ஆயுர்வேதம் கூரும் வழிமுறைகள்
அலர்ஜியைப் போக்கும் வழிமுறைகள்
உடலுக்கு பயன்படும் எண்ணெய்கள்
மூலமும் அதன் பயன்களும்
சரகர் கூறும் உணவு முறைகள்
உடல் பருக்கவோ இளைக்கவோ ஆயுர்வேதம் கூறும் வழிகள்
மருத்துவத் துறையின் சிறப்பான வளர்ச்சியை சரகர் கூறும் கருத்து
தடுக்க வேண்டியவை - பாகம் 1   பாகம் 2
ஆயுர்வேதத்தின் சிகிச்சை முறை
ஆயுர்வேதம் காட்டும் வாழ்கை நெறிகள்
ஆயுர்வேதம் கூறும் உடல் பாதுகாப்பு
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - ஹேமந்த காலம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - இளவேனிற் காலம்
ஆயுர்வேதம் கூறும் காலநிலை விளக்கம் - கார் காலம்
அடிப்படையும் அறிமுகமும் - பாகம் -1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4
எண்ணெய்தேய்ப்பு - பாகம்-1 பாகம்-2
வாத-பித்த-கபங்கள் அமைப்பும் இயக்கமும் பாகம்-1 பாகம்-2

உணவும் அதன் பயன்களும்










உணவும் அதன் பயன்களும்

என்றும் இளமைக்கு நெல்லிக்காய்!

பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
சோர்வு நீங்க…

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அஜீரணக் கோளாறு நீங்க…

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய….

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.


மருதாணியின் மகிமை

பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்…

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.
மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்
உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா… என்று தேடிப்போக வேண்டாம்.
கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம்.
உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

மஞ்சள்:
மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

ஏலக்காய்:
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

மிளகாய்:
மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

கறிவேப்பிலை:
கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

பூண்டு:
கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

கடுகு எண்ணெய்:
மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

உளுந்தம் பருப்பு:
உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

தேன்:
உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

மோர்:
உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

சிறு தானியங்கள்:
சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

பட்டை, கிராம்பு:
இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது
நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் காய்கறிகள்

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். அந்த வகையில் காய்கறிகளில் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான விட்டமின், கனிமச் சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.

அதேநேரத்தில் காய்கறிகளை உண்பதால், உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளால் கலோரி அளவும் குறைவாகவே இருக்கும்.

பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோடின், உடலுக்கு விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.

மிளகு, முட்டைக்கோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிறை காய்கறிகள் அனைத்திலுமே வைட்டமின் சி உள்ளது. இவற்றை உண்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

வேறு சில காய்கறிகளில் இரும்புச் சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால்
உடலின் இரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.

முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை வண்ணத்திலான காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால், ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது.

அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. தவிர அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது,

தவிர மிளகாய், பூசணி, கத்தரிக்காய், காரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சைக் கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது.

உடலின் பொட்டாசியம் அளவு சக்தி தேவைக்கு முக்கியப் பங்காற்றக் கூடிய நிலையில், பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. தவிர, பழங்கள், காய்கறிகளில் அமினோ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க ஏதுவாகிறது.

எனவே அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.
 
தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்

தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.

இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.
சரி வாங்க இப்ப பயிற்சிக்குள் நுழைவோம்

.தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்
.இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்.
.தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.
பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வீடியோவில் நான் சொல்லி கொடுப்பதுபோல் செய்யவும்.
கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது. திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.
இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி
பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.
இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.
வயிறு குறைந்து கட்ஸ் விழுந்து அழகு பெறும்.
சில முன்னெச்சரிக்கைகள்
ஹெரண்யா நோய் உள்ளவர்களும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை மேற்க்கொள்ளக்கூடாது.

கர்ப்பவதிகள் முதல் மூன்று மாத கர்ப்பம் வரையில் மட்டுமே இப்பயிற்சியை செய்தல் வேண்டும்.
ஆரம்ப நாட்களில் வயிறு, முதுகெலும்பு, தொடை போன்ற இடங்களில் வலி எடுக்கும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயிற்சியைப் பழகி வந்தால், படிப்படியாக வலி குறையும் பயிற்சியும் கைகூடும்.
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க…

சர்க்கரை நோய் என்பது என்ன? இரைப்பைக்கும் முன்சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான்.
ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர்.
இதோ அதற்கான வழிமுறைகள்:
1. டயாபடீஸை விரட்டலாம்:
அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியே மிக உயர்ந்த வழி.
முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள்.
ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிக மிகக் குறைவு.
2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்:
காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.
3. மகிழ்வான சூழல்:
பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.
இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு E ஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.
சர்க்கரை நோmய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும்.
சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.
அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
  • வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
  • வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
  • ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
  • மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
  • வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.

மருத்துவ குணங்கள்

 கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
 கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
 கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
 கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
 கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
.
இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்…

தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.
நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:
அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.
அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.
டயாபட்டீஸ் – சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

சக்கரை வியாதி (டயாபட்டீஸ்) >>சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
பரம்பரை ஒரு காரணமாகலாம்
உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
நகர்புற வாழ்வியல் சூழல்
முறையற்ற உணவு பழக்கம்
மது, புகை, போதை பொருட்களால்
உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
அடிக்கடி தாகம், அதிக பசி
உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் – அதனால் ஆண்மைக்குறைவு
தூக்கமின்மை
காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:

அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:

வாழைப்பூ
வாழைப்பிஞ்சு
வாழைத்தண்டு
சாம்பல் பூசணி
முட்டைக்கோஸ்
காலிஃபிளவர்
கத்தரிப்பிஞ்சு
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
புடலங்காய்
பாகற்காய்
சுண்டைக்காய்
கோவைக்காய்
பீர்க்கம்பிஞ்சு
அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:

முருங்கை கீரை
அகத்திக் கீரை
பொன்னாங்கண்ணிக் கீரை
சிறுகீரை
அரைக்கீரை
வல்லாரை கீரை
தூதுவளை கீரை
முசுமுசுக்கைகீரை
துத்தி கீரை
மணத்தக்காளி கீரை
வெந்தயக் கீரை
கொத்தமல்லி கீரை
கறிவேப்பிலை
சிறு குறிஞ்சான் கீரை
புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:

விளாம்பழம் -50கிராம்
அத்திப்பழம்
பேரீத்தம்பழம்-3
நெல்லிக்காய்
நாவல்பழம்
மலைவாழை
அன்னாசி-40கிராம்
மாதுளை-90கிராம்
எலுமிச்சை 1/2
ஆப்பிள் 75கிராம்
பப்பாளி-75கிராம்
கொய்யா-75கிராம்
திராட்சை-100கிராம்
இலந்தைபழம்-50கிராம்
சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:

எலுமிச்சை சாறு -100மி.லி
இளநீர் -100மி.லி
வாழைத்தண்டு சாறு -200மி.லி
அருகம்புல் சாறு -100மி.லி
நெல்லிக்காய் சாறு -100மி.லி
கொத்தமல்லி சாறு -100மி.லி
கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:

சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல் >> ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.
வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கிய, உபயோகமுள்ள ஆலோசனைகள். தந்தமைக்கு சகோதரருக்கு மிக்க நன்றி. நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது இதை படிப்பவர்கள் தனது உறவினர்களில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இவற்றை தெரிவித்து உதவலாம்.

இதில் குறிப்பிட்டுள்ள படி, இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று இருந்துவிடாமல் சிறு நீரகங்கள் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளையும் அவ்வப்போது எடுத்து பார்ப்பது சிறந்தது. உலகில் 10 நொடிகளில் ஒருவர் சர்க்கரை நோயால் இறப்பதாக ஒரு சர்வதேச அறிக்கை தெரிவிக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தர துஆச்செய்வோமாக.

சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

சக்கரை வியாதிக்கு தொடர்ந்து மருத்துவம் செய்வது மிக அவசியம்.

கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.

சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.

சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.
சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து. பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.
குடும்பத்தில் (தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அவையாவன;
1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.
நீங்கள் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும். இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.
2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.
3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.
5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.
6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.
7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.
8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.
9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.
12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.
13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.
15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.
16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.
17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.
18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.
19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.
நெல்லிக்காய்

உலர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு, ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு வகைகள் எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைப் போன்றே நெல்லிக்காய், நார்த்தங்காய், தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் பலன் தரக்கூடிய இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.

நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும் தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாகச் சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும்.

அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச் செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கமர்கட், கச்சான், பஞ்சுமிட்டாய், மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும் அரி நெல்லிக்காய், பொறி கடலை ஆகியவற்றை இளம் சிறார்கள் ஆவலுடன் வாங்கி உண்டு மகிழ்வது நமது நாட்டில் வாடிக்கை தானே! அதுவும் நெல்லிக்காய் சீசனில், நம் வீட்டுப் பெண்மணிகள் இவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஊறுகாய், சட்னி, பச்சடி போன்றவற்றையும் வடகம் தயாரிப்பதும் வழக்கம் தானே !

நெல்லிக்காய் எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவக் குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும் ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும். கணைச்சூட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு நெல்லிக்காயைச் சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும். உடல் அசதி மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத்தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்குண்டு. இரத்த உறைவால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாகப் பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேசியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

உணவு செரிமானமின்மைக்கு எப்படிப் பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தித் தலையில் தேய்த்துக் குளிக்கவும் நெல்லிக்காய்த் தைலம் மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.

இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன்களையும் முக்கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ முறைகளால் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை அளித்தும் ஆலோசனைகள் வழங்கியும் சேவை புரிவதின் மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

நன்றி : இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
பழங்களும் அதன் பயன்களும்

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லு…ம் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது

வெங்காயம்:வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்’ என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்’ சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்’ என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்’ என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது. தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.

சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது
.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
 
நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்:  தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம்

மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.

ஆரோக்கிய எடை:

உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு “உயரம் (செ.மீ.,ல்) – 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.

மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், “ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்’ என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் “லிப்டை’ உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி:தினமலர்
தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!

நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும் பணப் பிரச்சனைகளால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது. ஆனால் தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சாதாரணமாக நமது தலை முடி ஒவ்வொரு மாதமும் 1 செமீ வளர்கிறது. 6 செமீ நீளம் உள்ள முடியை பரிசோதனை செய்வதன் மூலம் நெடுங்காலமாக இருந்து வரும் அழுத்த அளவை அறியலாம்.
இதுதொடர்பாக இஸ்ரேலில் உள்ள மெய்ர் மெடிகல் சென்டரில் அனுமதிக்கப்பட்ட, மாரடைப்பு ஏற்பட்ட 56 ஆண்களின் முடி மாதிரியையும், இதய நோயாளிகள் அல்லாத 56 ஆண்களின் முடி மாதிரியையும் பரிசோதித்தனர். இதில் மாரடைப்பு நோயாளிகளின் முடியில் கார்டிசால் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

-தட்ஸ்தமிழ்
இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.

உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்’ என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
 
தொப்பை குறைக்க

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம்

புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம்

தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி

நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை

அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.
2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.
4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.
6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.
7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.
8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது
9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.
10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.
11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.
13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.
14. நேரத்திற்கு தூங்குங்கள்.
15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.
17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.
18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.
19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.
20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.
21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில்
வைத்திருங்கள்.
22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்
சிறுநீரகக் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுத்துக்கொள்ளும் போது சிறுநீரில் கழிவுப் பொருளாக வெளியேறுகின்றன. இந்த கால்சிய மூலங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிகின்றன.

அறிகுறிகள்

பின்பக்க விலாவில் வலி, முதுகு வழி, அடிவயிற்றில் வலி
குமட்டல், வாந்தி
நீர்தாரையில் எரிச்சல் ஏற்படுதல் (நீர் கடுப்பு)
குறைவாக சிறுநீர் கழித்தல்
சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்

சிகிச்சை முறைகள்

சிறுநீரகக் கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின் அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் சிறிய அளவில் இருக்கும் போது மாத்திரைகளால் வெளியேற்றி செய்து விடலாம்.
நுற்கதிர் மூலம் கற்களை உடைத்து விடுதல் (ESWL )
Endoscopy, Ureterorenoscopy, Nephroscopy, Open & Laparoscopy போன்ற சிகிசிசை முறைகள்
மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன.

இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன.

பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டு வ‌லி வருவத‌ற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளம் வயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.

மூ‌ட்டு வ‌லி வ‌ந்த ‌பிறகு அத‌ற்கு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வராம‌ல் தடு‌க்க மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌ப்பதே ‌சிற‌ந்தது.

உ‌ண்மை‌யிலேயே மூ‌ட்டு வ‌லியா?

மு‌ட்டி வ‌லி‌த்தாலே அது மூ‌ட்டு வ‌லி எ‌ன்று‌ ‌நினை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

மூட்டுகளில் கடுமையான வலியு‌ம் வீக்கமும் காணப்படும். மூட்டுகள் உஷ்ணமாக இருக்கும். மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் உடல் சோ‌ர்வு அசதி, கா‌ய்‌ச்ச‌ல் போன்ற அறிகுறிகளு‌ம் காணப்படும்.

மூ‌ட்டு வ‌லிகளு‌க்கு உடனடியாக ‌‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல் மூ‌ட்டு வ‌லி ‌தீ‌விரமடையு‌ம். ‌பிறகு கா‌ல்களை ‌நீ‌ட்ட‌க் கூட முடியாத ‌நிலை ஏ‌ற்படலாம்.

மூ‌ட்டு வ‌லி ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், நமது அ‌ன்றாட பழ‌க்க வழ‌க்க‌ங்களை மா‌ற்‌றி‌க் கொ‌ண்டாலே‌ப் போ‌து‌ம். அதாவது, நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். இ‌ந்த தவறை‌த்தா‌ன் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் செ‌‌ய்‌கிறா‌ர்க‌ள். அதாவது, கூ‌ன் போ‌ட்டபடி அம‌ர்‌வதாலேயே பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டுக‌ள் பல‌மிழ‌க்‌கி‌ன்றன.

நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கு‌திகா‌ல் செரு‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌ பெ‌ண்க‌ள் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணிகளை மாற்ற வேண்டும்.

எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம். அ‌திக நேர‌ம் உ‌ட்கா‌ர்‌ந்தபடி ப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ள், அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து காலார நட‌ந்து‌வி‌ட்டு வ‌ந்து உ‌ட்கா‌ர்‌ந்து வேலைகளை‌ச் செ‌ய்யலா‌ம்.

பெ‌ண்க‌ள் எ‌ந்த‌ப் பொருளையு‌ம் கு‌னி‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து தூ‌க்க‌க் கூடாது. காலை மட‌க்‌கி உ‌ட்கா‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் பொருளை‌த் தூ‌‌க்க வே‌ண்டு‌ம். தரை‌யி‌ல் உ‌ட்கா‌ர்‌ந்து வேலை செ‌ய்பவ‌ர்க‌ள், தா‌ங்க‌ள் அமரும‌் இரு‌க்கையை ‌மிருதுவாக இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மூ‌ட்டு வ‌லி வ‌ந்தவ‌ர்க‌ள்..

வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.

நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும்.

அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது ‌மிகவு‌ம் நல்லது.

மூ‌ட்டு வ‌லி உடையவ‌ர்க‌ள் செ‌ய்ய வே‌ண்டிய உடற்பயிற்சிகளை செ‌ய்யலா‌ம். உட‌ற்ப‌யி‌ற்‌சிக‌ள் தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும்.

கார‌ட், ‌பீ‌ட்ரூ‌ட் போ‌ன்ற கா‌ய்களை ப‌ச்சையாக சா‌ப்‌பிடலா‌ம், ‌சூ‌ப் செ‌ய்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம். வாழை‌ப் பழ‌ங்களை அ‌திகமாக உ‌ண்ணு‌ங்க‌ள்.

கா‌பி, டீ போ‌ன்றவ‌ற்றையு‌ம், பொ‌ரி‌த்த உணவுகளையு‌ம் த‌வி‌ர்‌த்து‌விடுவது ந‌ல்லது.

நடை‌ப்ப‌‌யி‌ற்‌சி, உட‌ற்ப‌யி‌ற்‌சி எதுவாக இரு‌ந்தாலு‌ம் அளவோடு இரு‌க்க வே‌ண்டு‌ம்.

வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதை எ‌ப்போது‌ம் லேசாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌‌ம் அவ‌சிய‌ம். வலியைப் பற்றியே நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது‌ம் ந‌ல்லத‌ல்ல‌
குறட்டையை தடுக்க வழிகள்

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.

இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.

அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.

ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.

கழுத்து வலி

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.
மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.

முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.
குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.
அறிகுறிகள்

கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.
அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.
இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.
இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு

பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒதுக்க வேண்டிய உணவுகள்

மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது.

இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

mginger

Kural